ஓவியங்களை விற்று லட்ச ரூபாய் நன்கொடை: 5-ம் வகுப்பு மாணவி அசத்தல்!

ஸ்ருதி
ஸ்ருதி
Published on

பெங்களூருவில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ருதி, தான் வரைந்த ஓவியங்களை விற்றுக் கிடைத்த 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை  புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சைக்காக அளித்தது நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜே பி நகர் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி.இவர் தனது ஐந்து வயதிலிருந்தே நூற்றுக்கணக்கான ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக கொரோனா லாக்டவுன் சமயத்தில் பள்ளிகள் திறக்காமல் இருந்தபோது, தனது நேரத்தை முழுவதுமாக ஓவியம் வரைய அர்பணித்துள்ளார். அப்போது அவர் வரைந்த அனைத்து ஓவியங்களையும் தன்னார்வத் தொண்டு அமைப்பின் உதவியுடன் பெங்களூருவில் பல கண்காட்சியில் அவரது பெற்றோர்கள் இடம்பெற செய்தனர்.

அதில் கிடைத்த 30 ஆயிரம் பணத்தை முதலில் அனாதை ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

அதில் கிடைத்த உந்துதலில் தன்னுடைய பல்வேறு ஓவியங்களை தொடர்ந்து பல்வேறு கண்காட்சியில் இடம்பெற செய்து அதன் மூலமாக 1.30 லட்சம் நிதி திரட்டி பெங்களூருவில் உள்ள கிட்வாய் புற்றுநோய் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

பெங்களூரு கிட்வாய் புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்ட ஸ்ருதியின் பண்புக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com