பொதுத் தேர்வு எழுத பயம் வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு எந்த பயமும் வேண்டாம். எந்த விதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர் கொள்ளுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளார்கள் . அந்த மாணவ மாணவிகளுக்கு தனது வாழ்த்து செய்தியினை தெரிவித்து கொண்டார் மு.க. ஸ்டாலின்.

பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம். என்ன பரீட்சை கவலையில் இருக்கீற்களா? ஒரு கவலையும் வேண்டாம். எந்த பயமும் வேண்டாம். இது இன்னொரு பரீட்சை, அவ்வளவு தான். அப்படித்தான் இந்த தேர்வை நீங்கள் அணுக வேண்டும். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள்.

உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து வீட்டீர்கள் என்று அர்த்தம். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது அல்ல. உங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவது. அதனால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

தேர்வை பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படியுங்கள். புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக, முழுமையாக எழுதுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் போல நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com