பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டாம் - FBI எச்சரிக்கை

பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டாம் - FBI எச்சரிக்கை

பொதுவெளியிலுள்ள சார்ஜ் போர்ட்டல்கள் வழியாக நடக்கும் 'ஜூஸ் ஹேக்கிங்' முறை தற்போது அதிகரித்துள்ளதாக FBI அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் செல்போன் மற்றும் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஒருவருடைய வீட்டுக்கு செல்லாமலேயே இணையம் வழியிலேயே தந்திரமாக திருடும் சம்பவங்கள் வாடிக்கையாக்கிவிட்டது. 

இணையத்தில் தந்திரமாக திருடுவதற்கு ஹேக்கிங் என்று கூறுவார்கள். இணையம் மற்றும் தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த இத்தகைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அவர்களால் உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் தனிப்பட்ட தரவுகள் முதல் வங்கிக் கணக்குகள் வரை அனைத்தையும் லாவகமாக கொள்ளையடிக்க முடியும். தற்போது நம்முடைய தகவல்கள் அனைத்தும் செல்போனையே கிடைத்துவிடுவதால், ஒருவருடைய ஈமெயில் ஐடி கிடைத்தால் போதும், அதை வைத்து தனது சித்து விளையாட்டுகளை ஹேக்கர்கள் அரங்கேற்றி விடுகிறார்கள். 

பொதுவாகவே அவர்கள் நம்முடைய செல்போனில் எப்படி நுழைகிறார்கள் என்று கேள்வி அனைவருக்கும் இருக்கும். நாம் இணையத்தில் உலாவும் போதோ அல்லது செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளில் லிங்குகளை கிளிக் செய்யும்போதோ இந்த இணையத் திருடர்கள் நம் செல்போனில் நுழைந்து விடுகிறார்கள். எனவே ஸ்மார்ட்போன் பயனாளர்கள் எல்லா விதங்களிலும் கவனமாக இருந்தால் மட்டுமே ஹேக்கிங் சம்பவங் களிலிருந்து தப்பிக்க முடியும். 

இதில் ஒரு பகுதியாக, பொதுவெளியில் இருக்கும் செல்போன் சார்ஜ் போர்டல்கள் மூலமாக செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதால், இனி அவற்றை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவின் FBI மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதை ஜூஸ் ஹேக்கிங் என்று கூறுவார்கள். 2011 காலகட்டத்தில் தான் இது மிகவும் பிரபலமாக இருந்தது. 

ஹேக்கர்கள், பொதுவெளியில் பொருத்தப்பட்டிருக்கும் USB போர்ட்டல்கள் வழியாக, ஒருவர் அதில் சார்ஜ் செய்யும்போது எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே செல்போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் திருடிக் கொள்கிறார்கள். இந்த முறை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்களை கவனமாக இருக்க வேண்டும் என FBI அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிலும் இதே போன்று ஜார்ஜ் செய்யும் வசதி ரயில் நிலையம், ஏர்போர்ட் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட்டிருக்கிறது. 

தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே ஹேக்கிங் செய்பவரை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இதுவே நம் நாட்டில் நடந்தால் என்ன செய்ய வேண்டுமென்பது கூட இங்கே யாருக்கும் தெரியாது.  எனவே நமது நாட்டில் நம் தரவுகளை பாதுகாப்புடன் வைத்துக்கொள்வது நம்முடைய கடமையாகும். இனி பொதுவெளியில் செல்போனை சார்ஜ் செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை வெளியே எந்த இடத்திலும் உங்கள் செல்போனை சார்ஜ் போட வேண்டாம். 

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் முன்னரே செல்போனை முழு சார்ஜ் செய்து கொள்ளுங்கள், அல்லது முடிந்தால் ஒரு பவர்பேங்க் வாங்கி வெளியே செல்லும்போது எடுத்துச் செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com