என்னை சீண்டிப் பார்க்காதீங்க - கோபத்தின் உச்சிக்குப் போன குஷ்பு; அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அறிவாலயம்.

என்னை சீண்டிப் பார்க்காதீங்க - கோபத்தின் உச்சிக்குப் போன குஷ்பு; அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அறிவாலயம்.

நாளை என் மகள்கள் என்னை பார்த்து, ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பேசுகிறேன் என்று குஷ்புவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பரபரப்பானதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி  கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்பு குறித்து, தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அநாகரீகமாக பேசியிருந்தார். இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, பெண்களுக்கு எதிராக யார் என்ன பேசினாலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நான் கேள்வி கேட்பேன். நடவடிக்கையும் எடுப்பேன். முதல்வர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், என்னை சீண்டிப்பார்த்தால் என்னுடைய பதிலடி எப்படி இருக்கும் என்ற அவருக்கே தெரியும் என்று பேசினார்.

சிலர் தங்களின் தாயின் வளர்ப்பை அசிங்கப்படுத்து கிறார்கள். தி.மு.க.வின் தாயும், தந்தையும் கருணாநிதிதான். இப்படி மூன்றாந்தர பேச்சின் மூலமாக அந்த கட்சிக்காரர்கள் கருணாநிதியைத்தான் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். அது தெரியாமல் சிலர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை கேட்டுவிட்டு நாளைக்கே தி.மு.க.வினர் என் வீட்டின் மீது கல்வீசுவார்கள். ஏற்கனவே இதையெல்லாம் பார்த்திருக்கிறேன். எப்படி சமாளிக்கவேண்டும் என்பது எனக்குத் தெரியும்.

எல்லாக் கட்சிகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. பெண்களை இழிவாக பேச யார் உரிமை கொடுத்தது? நான் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் பேசுறேன். நான் திருப்பி அடிப்பேன். எனக்கு அந்த தைரியம் இருக்கிறது. யாரையும் நம்பி தமிழகம் வரவில்லை. என்னுடைய திறமையை நம்பி மட்டும்தான் வந்தேன்.

கருணாநிதி காலத்தில் இருந்த தி.மு.க. இப்போது கிடையாது. இது ஸ்டாலின் அடிப்படையிலான புது திராவிட மாடல். தமிழ்நாட்டுக்கு நான் வந்து 37 வருஷம் ஆச்சு. இத்தனை வருஷத்தில இப்படி கோபமா நான் பேசியதை யாராவது பார்த்தது உண்டா? இதற்கு முன்பு கூட, என்னை அவதூறாக பேசினார்கள். அப்போது தி.மு.க. தலைவர்கள் யாராவது கண்டனம் தெரிவித்தார்களா? முதல்வர் கண்டனம் தெரிவித்தாரா? ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் திரும்பவும் எப்படி கட்சியில் சேர்ந்தார்?

குஷ்புவின் ஆவேச பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தர நீக்கம் செய்வதாக துரைமுருகன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, நடவடிக்கை எடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன குஷ்பு, அவதூறு பேசியதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குஷ்பு, பா.ஜ.கவில் இருப்பதால்தான் முதல்வருக்கே சவால் விட முடிகிறது. தி.மு.க பேச்சாளர்கள் ஜெயலலிதாவை இதை விட மோசமாக பேசியிருக்கிறார்கள். குஷ்புவை விட பா.ஜ.கவை பார்த்து தி.மு.க பயப்பட ஆரம்பித்திருப்பதாக இணையத்தில் தி.மு.க ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனிமொழி உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் குஷ்பு சம்பந்தப்பட்ட பிரச்னையில் மௌனமாக இருப்பதும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com