பெண்களுக்கு தங்க நகைகள் மீது ஆசையில்லையா? காலம் மாறிப்போச்சு! - லேட்டஸ்ட் சர்வே சொல்வது என்ன?

பெண்களுக்கு தங்க நகைகள் மீது ஆசையில்லையா? காலம் மாறிப்போச்சு! - லேட்டஸ்ட் சர்வே சொல்வது என்ன?
Published on

பெண் புத்தி, முன் புத்தி. அன்றைய பெண்கள், மாத வருமானத்தில் சிறிய தொகை மீதம் கிடைத்தாலும் அதை பத்திரமாக சேர்த்து வைத்து தங்க நகைககளாக வாங்கிவிடுவார்கள் என்பார்கள். இன்றைய பெண்கள் எப்படி?

வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பெண்களுக்கு தங்க நகைகள் மீது நாட்டமில்லை என்கிறது லேட்டஸ்ட் சர்வே. 65 சதவீத பெண்கள் தங்களுடைய பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதையே விரும்புவதாக அனாராக் என்னும் அமைப்பு ஏற்படுத்திய சர்வே தெரிவிக்கிறது.

கொரோனா தொற்று பரவலுக்கு முன்னரே பொருளாதார சரிவு காரணமாக ரியல் எஸ்டேட் மோசமான நிலையில் இருந்தது. கொரோனா காலத்தில் கட்டுமானத் தொழில் முற்றிலுமாக முடக்கப்பட்டது. தற்போது மெல்ல சரிவிலிருந்து மீண்டு வருகிறது. என்னதான் ரியல் எஸ்டேட் சரிவில் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு என்னும் கனவு பரவலாக எல்லோரிடமும் இருக்கிறது.

அதே கனவு, பெண்களிடமும் உள்ளது. சொந்த வீடு, சொந்த பிளாட், சொந்த நிலம் என்று ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கே பெண்கள் முக்கியத்துவம் தர விரும்புகிறார்கள். அடுத்ததாக பெண்களில் மனதை கவர்ந்திருப்பது, தங்கம் அல்ல. ஸ்டாக் மார்கெட்!

ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்வதை முன்னர் பெண்கள் விரும்பியதில்லை. தற்போது ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 20 சதவீத பெண்கள் ஷேர் மார்க்கெட்டில் தங்களது பணத்தை முதலீடு செய்வதை விரும்புகிறார்கள்.

அடுத்ததாக தங்க நகை. தங்கத்திற்கு என்றும் எப்போதும் மவுசு உண்டு. அதே போல் பிக்ஸட் டெபாசிட் மீதும் மிடில் கிளாஸ் மக்களுக்கு கவர்ச்சி உண்டு. ஆனால், பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே தங்க நகை, பிக்ஸெட் டெபாசிட் பக்கம் முதலீடு செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.

80 சதவீத பெண்கள், வீடு வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 83 சதவீத பெண்கள், குறைந்தபட்சம் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பிளாட் வாங்கவே விரும்புகிறார்கள்.

அடுத்ததாக 90 லட்சம் பெறுமானமுள்ள பிளாட்டை 36 சதவீத பெண்கள் விரும்புகிறார்கள். 20 சதவீத பெண்கள் மட்டுமே ஒன்றரை கோடிக்கும் அதிகமான விலை மதிப்புள்ள பிளாட்டை விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் 45 லட்சம் அதிக பட்சம் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் பிளாட் வாங்கவே விரும்புகிறார்கள். ஆக, வீடு வாங்குவதிலும் பெண்கள் சிக்கனமாக இருப்பதாக தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com