திருப்பதி பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டபுள் டக்கர் பஸ்ஸில் பயணம் போகலாம்!

டபுள் டக்கர் பேருந்து
டபுள் டக்கர் பேருந்து

திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக டபுள் டக்கர் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி மக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ரூ 2 கோடி மதிப்பில் 2 அடுக்குகள் கொண்ட மின்சார ஏ.சி. வாங்கப்பட்டு உள்ளது. மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும், பொதுமக்களுக்கு அதிக சத்தம் ஏற்படுத்தி இடையூறு வராத வகையில் இந்த பஸ் வாங்கப்பட்டு உள்ளது.

இந்த பஸ் நிர்வகிப்பது மற்றும் எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. டபுள் டக்கர் பஸ்சை இயக்க மின் கம்பிகள் தொடாதவாறு அகலமான சாலைகள் இருக்க வேண்டும். ஆனால் திருப்பதியில் டபுள் டக்கர் பஸ் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என கூறப்படுகிறது.

சீனிவாச சேது பாலம் மாஸ்டர் பிளான் சாலைகளில் மட்டுமே இந்த பஸ் இயக்க முடியும். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி காளஹஸ்தி இடையே செல்லும் டவுன் பஸ்களை திருப்பதி நகருக்குள் திருப்பிவிட பல்வேறு முயற்சிகள் நடந்தது.

முதற்கட்டமாக, திருப்பதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இந்த பேருந்தை இயக்க முடிவு செய்திருப்பதாக துணை மேயர் தெரிவித்தார். இப்பேருந்தின் வெற்றியை பொறுத்து, மேலும் சில பேருந்துகளை இயக்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறினார். இதனால் திருப்பதி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com