சென்னையில் மீண்டு (ம்) வரும் டபுள் டக்கர் பஸ்..குஷியில் மக்கள்!

டபுள் டக்கர் பஸ் மாதிரி படம்
டபுள் டக்கர் பஸ் மாதிரி படம்
Published on

சென்னையில் விரைவில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர் போன்று சாலையில் மிதந்து வரும் இந்த டபுள் டெக்கர் பேருந்தில் சென்னைவாசிகள் பயணம் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.மாடிப் பேருந்து என்று அழைக்கப்பட்ட டபுள் டெக்கர் பேருந்துகள் 1997 முதல் 2008ஆம் ஆண்டு வரை சென்னை சாலைகளில் வலம் வந்தன. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் இந்த சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகளை மீண்டும் இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.அதன் தொடர்ச்சியாக பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதில், டபுள் டக்கர் பேருந்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படும் என கூறப்படுகிறது.

மின் கம்பிகள் இல்லாத, தாழ்வான மரங்கள் இல்லாத சாலைகளான அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கனவே டபுள் டக்கரில் பயணித்த மக்களும் தங்களது புது அனுபவத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com