ஹைதராபாத்தில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை

ஹைதராபாத்தில்  மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விரைவில் பொதுமக்கள் பயனுக்காக டபுள் டக்கர் பேருந்து சேவை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே டி ராமாராக இதை தெரிவித்தார்.

தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் கே டி ராமாராவ். இவருக்கு ஒரு நெட்டிசன் ட்வீட்டரில் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

ஹைதராபாத்தில் நிஜாம் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட இரட்டை அடுக்கு பேருந்து சேவைகள் 2003ம் ஆண்டுவரை இயங்கிக் கொண்டிருந்தன. பாரம்பரியமிக்க இரட்டை அடுக்கு பேருந்துகள் அதன் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை அறிமுகப்படுத்த  திட்டம் ஏதாவது உள்ளதா என்று கேட்டிருந்தார்.  

அதற்கு பதில் சொல்லும் விதமாக, தாம்  ​​அந்த பேருந்துகளில் பயணித்த நினைவுகளை நினைவு கூர்ந்த கே.டி. ராமாராவ் டபுள் டக்கர் பேருந்துகளை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி  ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆறு மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளுக்கான ஆர்டரை வழங்கியது. மூன்று பேருந்துகள் முதற்கட்டமாக  வழங்கப்பட்டு இன்று தொடங்கப்பட்டன.  மீதமுள்ள மூன்று பேருந்துகளும் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது

இந்த பேருந்துகள் முழுக்க முழுக்க மின்சார பேட்டரியில் இயங்கும் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதில் இருந்தும் தடுக்க முடியும். ஹைதராபாத் சாலைகளில்  டபுள் டக்கர் பேருந்துகள் சேவை வரும் 11ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. முன்னதாக புதியதாக வாங்கிய  பேருந்துகளை தலைமைச் செயலர் சாந்திகுமாரி மற்றும் அமைச்சர் கே.டி.ஆர் ஆகியோர்  பார்வையிட்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஃபார்முலா இ-பிரிக்ஸின் பின்னணியில், டேங்க்பண்ட், நெக்லஸ் சாலை, பாரடைஸ் மற்றும் நிஜாம் கல்லூரி பகுதிகளில் பயணிகளுக்கு இந்தப் பேருந்து சேவை கொண்டு வரப்பட உள்ளது. 

இந்த பேருந்தில் டிரைவருடன் சேர்த்து 65 பேர் அமரக்கூடிய வசதி உள்ள நிலையில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ பயணிக்க முடியும் என்றும்  2 முதல் 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பேருந்துகள் ஒவ்வொன்றும்  ₹ .2.16 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்காக  பேருந்து பராமரிப்பு மூன்று ஆண்டுகளுக்கு அந்நிறுவனமே ஏற்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

சுற்றுலாத் பயணிகளை கவரும்  வகையில் பேருந்துகளை பாரம்பரியச் சின்னங்கள் உள்ள சுற்றுப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6 பேருந்துகளுடன் தொடங்கப்படும் டபுள் டக்கர் பேருந்து சேவை 20 ஆக பேருந்துகள் வரை இயக்க எச்.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com