இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பான டவ் ஷாம்பூவில், புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் இருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து டவ் ஷாம்பூ உட்பட, இந்துஸ்தான் யூனிலீவர் பிராண்டு ஷாம்பூக்கள் அனைத்தும் சந்தையில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
யூனிலீவரின் டவ் உலர் ஷாம்பூ உட்பட பல்வேறு ஷாம்பு பிராண்டுகளான நெக்ஸஸ், சுவேவ், டிகி மற்றும் ட்ரெசெம்மே ஏரோசோல்ஸ் ஆகியவற்றிலும் புற்றுநோய் உண்டாக்கக் கூடிய பென்சீன் என்ற ரசாயனம் அதிகளவு இருப்பதாக அமெரிக்க FDA (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) உறுதிப் படுத்தியது பெஉம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டவ் டிரை ஷாம்பூவை அமெரிக்க சந்தையில் இருந்து வாபஸ் பெறப் பட்டுள்ளது.
உலர் ஷாம்பூக்கள் போன்ற ஸ்ப்ரே-ஆன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பென்சீன் என்பது பெட்ரோலியம் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதன் மூலம் கிடைப்பதாகும்.
இதையடுத்து இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் அமெரிக்க சந்தையில் டவ் ஷாம்பூவைத் திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.