திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது: தமிழ்நாடு அரசு!

வீரமணி
வீரமணி

2023 ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தேர்வுச் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடியவர்கள், பாடுபட்டவர்கள், பங்காற்றியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 2021 ஆம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்த விருது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் பணியாற்றிய மூத்த தலைவர்களை தேர்வு செய்து வழங்கி வருவது குறிப்பிடத்தகுது.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டினுடைய மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பொதுவுடமைக் கட்சியினுடைய தலைவராக உள்ள சங்கரய்யாவிற்கு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு அரசியலில் இலக்கணம் என்று அழைக்கப்படுகிற இந்திய பொது உடைமை கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை யாருக்கு வழங்குவது என்று தேர்வு செய்வதற்கான தேர்வு குழுவின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தகைசால் தமிழர் விருதுக்கு திராவிடர் கழகத்தினுடைய தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் விருதையும், உடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இளம் வயது முதல் அரசியல் ஈடுபட்டவர். தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபட்டவர், தந்தை பெரியாருடன் இணைந்து சமூக பாகுபாடை அகற்றுவதற்கான போராட்டத்தின் முக்கிய பங்காற்றியவர், 40 முறை சென்றுள்ளார். மேலும் 1962 ஆம் ஆண்டு முதல் விடுதலை நாளிதழின் ஆசிரியராக இருந்து பணியாற்றி வருகிறார். உண்மை, பெரியார் பிஞ்சு போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்ற கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com