Dunzo 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!

Dunzo 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!

இந்தியாவின் மிகப்பெரிய டெலிவரி சேவை அளிக்கும் Dunzo நிறுவனம் 60 முதல் 80 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில் அடுத்து மீண்டும் ஒரு பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அதன் ஊழியர்களுக்கு அச்சத்தை அளித்துள்ளது.

இது முந்தைய பணி நீக்கத்தை காட்டிலும் மிகவும் அதிகம் என்பதால் டன்சோ ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் குவிக் காமர்ஸ் பிரிவில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கு அச்சம் அதிகரித்துள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் துறையில் பணிநீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், டன்சோ புதிய பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

டன்சோ நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள வேளையிலும், இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது இருக்கும் மொத்த ஊழியர்களில் சுமார் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணிநீக்க அறிவிப்பு மூலம் சுமார் 300 ஊழியர்கள் பணி நீக்கத்தில் பாதிக்கப்படுவார்கள்.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இயங்கி வரும் டன்சோ உடனடி சேவை அளிக்கும் நிறுவனங்களில் முதன்மையானது. இந்தியாவில் பணவீக்கம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், மக்கள் செலவு செய்யும் அளவீட்டை குறைக்க துவங்கியுள்ளனர், இதனால் டன்சோ வர்த்தகமும் குறையும் என்பதால் இந்த பணிநீக்கத்தை அறிவித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் முதலீட்டை ஈர்க்க முடியாமல் தவித்து வரும் வேளையில் டன்சோ மட்டும் சமீபத்தில் கன்வர்ட்டபெல் நோட்ஸ் மூலம் சுமார் 75 மில்லியன் டாலர் அளவிலான நிதியை முதலீடாக பெற்றது. ரிலையன்ஸ் ரீடைல் முதலீட்டில் இயங்கும் டன்சோ வேகமாக வளர்ந்தாலும் அதன் லாப அளவீட்டை தக்கவைக்க இந்த பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

டன்சோ நிறுவனம் சுமார் 50 மில்லியன் டாலர் நிதியுதவி அதாவது முதலீட்டை கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திடமிருந்து மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 25 மில்லியன் டாலர் மற்ற முதலீட்டாளர்களிடமிருந்தும் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com