ஏற்காட்டில் விளையும் பழங்களின் ராஜா துரியன்..சுற்றுலா பயணிகளிடம் அமோக வரவேற்பு!

ஏற்காட்டில் விளையும் பழங்களின் ராஜா துரியன்..சுற்றுலா பயணிகளிடம் அமோக வரவேற்பு!

பொதுவாகவே பழங்கள் அனைத்தும் மனிதர்களின் உடல் நலனைக் காக்கும் அற்புத உணவாகிறது . முக்கனிகள் எனப்படும் மா பலா வாழை இம்மூன்றும் இல்லாத விருந்துகள் இல்`லை .இந்த வரிசையில் சில ஆண்டுகளாக நம் கவனத்தைக் கவர்ந்துள்ளது துரியன் பழங்கள். பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் இந்தப் பழங்கள். தென்கிழக்கு ஆசிய நாடுகளான புருனே, மலேசியா ,இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் மலைகளில் துரியன் மரங்கள் பெருவாரியாக வளர்க்கப்படுகின்றன.

நம் தமிழகத்தில் நீலகிரியின் குன்னூர், குற்றாலம், மூணாறு , ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் இந்த மரங்கள் வளர்க்கப்பட்டு இதன் பழங்கள் விற்பனைக்கு வருகிறது குழந்தை பாக்கியம் பெற இந்தப் பழத்தை சாப்பிடுவது நல்லது என்பதால் இந்தப் பழத்துக்கு மக்களிடையே பெரும் கிராக்கி உண்டு .

ஆண்டுக்கு ஒரு முறை ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காய்க்கும் இந்தப் பழங்கள் இந்தியாவில் அபூர்வமாக கருதப்படுகிறது சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காவேரி பீக் மற்றும் செம்மநத்தம் மலை கிராமங்களில் உள்ள தனியார் தோட்டங்களில் துரியன் மரங்கள்  வளர்க்கப்படுகின்றன.

50 மீட்டர் உயரம் கொண்ட இந்த மரங்கள் பலா மரங்களின் குடும்பத்தை சேர்ந்தது துரியன் பழம் 4 கிலோ எடையில் 30 சென்டிமீட்டர் நீளம் 15 சென்டிமீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும் பலாப்பழம் போன்ற மஞ்சள் நிறத்தில் இந்தப் பழம் காணப்படும் துரியன் பழக்கத்தில் அதிக புரதம் சத்துக்கள் உள்ளதால் உடல் வலிமைக்கு ஏற்ற பழமாக கூறப்படுகிறது. தற்சமயம் ஏற்காட்டில் விடுமுறை சீசன் என்பதாலும் பழங்களின் சீசன் என்பதாலும் இந்தப் பழங்கள் அமோகமாக விறபனையாகிறது..பழம் ஒன்று ரூபாய் 1300 க்கு விற்றாலும் இதன் மருத்துவ குணங்களுக்காக மக்கள் விரும்பி வந்து இதை வாங்கிச்செல்கின்றனர் .

பலாப்பழத்தை போலவே கரடு முரடான முள் தோற்றம் உள்ள இனிப்பு சுவை கொண்ட துரியன் பழத்தின் வித்தியாசமான ருசி சுவைக்கத் தூண்டுகிறது.  துரியன் பழம் மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில்  ஏற்படும் நோய் தொற்றுக்கு நல்ல மருந்தாகிறது. துரியன் பழத்தில் மாங்கனிசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பைரிடாக்சின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணியாகவும்  போதைப் பழக்கங்களால் உடல் வலுவிழந்தவருக்கு இந்த பழம் நல்ல மருந்தாகவும் உள்ளதாக இதன் விற்பனையாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com