மைசூரில் தசரா விழா நிறைவுபெற்றது!

தசரா
தசரா
Published on

கர்நாடக மாநிலம் மைசூரில் ஊரே களைகட்டியிருந்த பத்து நாட்கள் நடைபெற்ற தசரா விழா சிறப்பாக நிறைவுபெற்றது.

கொரோனாவால் கடந்த ஆண்டுகளாக எளிமையான முறையில கொண்டாடப்பட்ட தசரா விழா இம்முறை விமரிசையாக கொண்டாடுவதாக, கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இம்முறை 413வது தசரா விழாவை, செப்டம்பர் 26ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார். துவக்க நாள் முதல், நேற்று முன்தினம் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் நடந்தன.

தசரா விழா பிரதான நிகழ்வான, ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. தங்க அம்பாரியில் பவனி வந்த சாமுண்டீஸ்வரி தேவி, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

palace
palace

மதியம் அரண்மனையின் பலராமா நுழைவு பகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, நந்தி கொடிக்கு பூஜை செய்தார். இதன் பிறகு நாட்டுப்புற கலைகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆரம்பமானது.

மாலை 750 கிலோ உடைய தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, முதல்வர் பசவராஜ் பொம்மை, யதுவீர், மேயர் சிவகுமார், அமைச்சர்கள் சோமசேகர், சுனில்குமார் ஆகியோர் ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். அரண்மனையில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள பன்னி மண்டபம் வரை ஊர்வலம் நடந்தது. வழி நெடுகிலும் இரு புறங்களிலும் மக்கள் வெள்ளம் போன்று நின்றிருந்தனர். இந்நிகழ்வுடன், மைசூரில் களைகட்டியிருந்த தசரா விழா மிக சிறப்பாக இனிதே நிறைவுபெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com