உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்!

 டி.ஒய்.சந்திரசூட்
டி.ஒய்.சந்திரசூட்
Published on

நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

நாட்டின் உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் அடுத்தமாதம் (நவம்பர் 8) முடிவடைய உள்ளது.

அதையடுத்து உச்சநீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யும்படி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு கடந்த 7-ம் தேதி கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பெயரை யு யு லலித் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமித்து குடியரசுதலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்கவுள்ளார்.

கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

பின்னர் 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வரை அப்பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com