சுற்றுச்சூழலை பாதிக்காத இ-பைக் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி.. மத்திய அரசு தகவல்!

இ-பைக்
இ-பைக்

ந்தியாவில் நடப்பாண்டில் விற்பனை செய்யப்பட்ட மின்சார வாகனங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 40 விழுக்காடுக்கும் அதிகமானவை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும் கடந்த 20-ஆம் தேதி வரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 44 ஆயிரத்து 600 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 802 வாகனங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலேயே அதிக மின்சார வாகனங்கள், குறிப்பாக மின்சார இருசக்கர வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் தயாராகி வருகிறது. கிருஷ்ணகிரியில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், அதிகபட்சமாக 1 லட்சத்து 75 ஆயிரம் இருசக்கர வாகனங்களையும், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 1 லட்சத்து 12 ஆயிரம் இருசக்கர வாகனங்களையும் உற்பத்தி செய்துள்ளன. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், செங்கல்பட்டிலும் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

எளிதாக கிடைக்கும் உதிரி பாகங்கள், ஏற்றுமதிக்கான சிறப்பு வசதி, தகுதிவாய்ந்த பணியாளர்கள், தமிழ்நாட்டில் அதிகம் இருப்பதால், மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன

2025-ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களின் உற்பத்திக்காக இந்தியாவில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யப்படும் என்றும், இதன் மூலம் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com