ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 30% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு "கட்"!

ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 30% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு "கட்"!
Published on

இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இந்த வருடம் பணி நீக்கம் இல்லை ஆனால் சம்பள உயர்வை 70 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட், பணிநீக்கம் அறிவிக்காதது பெரும் நிம்மதி அளித்தாலும் சம்பள குறைப்பை அதிகளவிலான ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இந்தச் சம்பள குறைப்பு என்பது உயர் அதிகாரிகளுக்கு மட்டும் என்பதால் அதிகப்படியான ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதி அளித்துள்ளது.

தற்போதைய மேக்ரோ பொருளாதாரச் சூழ்நிலையில், எங்கள் ஊழியர்களின் அதிகப்படியான நலன் மனதில் வைத்து, எங்கள் நிதி ஆதாரங்களை நிர்வகிப்பதில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம் என பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்தக் கடினமான முடிவு நிறுவனத்தின் 4,500 ஊழியர்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் ஊழியர்களுக்கு நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில், கிரேடு 10-க்கு மேல் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு இந்த வருடம் எவ்விதமான சம்பள உயர்வுகளும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்பு படி கிரேடு 10 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மேலாளர்கள் முதல் துணைத் தலைவர்கள் வரை பலதரப்பட்ட பதவிகளில் உள்ளவர்கள். இவர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை கட் செய்திருந்தாலும் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் திட்டமிட்டபடி போனஸ் என அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான வருடாந்தர அப்ரைசல்கள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் 70 சதவீத ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் 1 முதல் சம்பள உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com