

விருதுநகர் மாவட்டத்தில் இன்று பல இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் சற்றுமுன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியே அலறியடித்து ஓடினர். சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிர்வை உணர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த நில அதிர்வு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவலோ சேதாரங்கள் குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.