பொருளாதார நெருக்கடி: 50% ராணுவத்தினரை வீட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு!

பொருளாதார நெருக்கடி: 50% ராணுவத்தினரை வீட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு!
Published on

ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது போர் ஏதும் இல்லாத சூழலில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை ராணுவத்தில் தற்போது 200,783 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டின் இந்த எண்ணிக்கையை 1,35,000 என குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் ராணுவத்தின் ஊடக பேச்சாளர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் 2030-க்கு ராணுவத்தின் எண்ணிக்கையை 1,00,000 –மாக குறைக்கவும், 2030 ஆம் ஆண்டுக்குள் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு சவால்களை சந்திக்கும் வகையில் ராணுவத்தை சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப ராணுவ பலத்தை அதிகரிப்பதற்கும் குறைப்பதற்கும் அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தற்போது போர் ஏற்படும் சூழல் இல்லாத நிலையில் பலத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமானதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் வைரஸ் தாக்குதலின்போது அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிட் தொற்றாளர்களை

தனிமைப்படுத்துதல், கோவிட் தொற்றாளர்களை அழைத்துச் செல்லுதல், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இயற்கை சீற்றங்களின்போது ராணுவத்தினரின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்து வருவதால் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

எனவே நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டும், போர் இல்லாத சூழலை கருத்தில் கொண்டும் ராணுவ பலத்தை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com