ஆசிரியர்களை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

சம வேலைக்கு சம ஊதியம் தரப்படும் என்ற வாக்குறுதியை திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்திருந்தது. தேர்தல் வாக்குறுதி 311 ஆக இந்த வாக்குறுதியை தற்போது வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் போராடும் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைக் கூட மறுக்கப்படுவ்து கண்டனுத்துக்குரியது என்றும் அரசு அவர்களை அழைத்து உடனே பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்றும் முன்னாள் தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சம வேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில்,இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து வீட்டுச் சிறையில் (House Arrest) வைத்துள்ள ஸ்டாலின் அரசு, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு சுவிட்ச் ஆஃப் செய்து, தற்போது வரை விடுவிக்கவில்லை என செய்திகள் வருகின்றன.

சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் மு.க. ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக ஆசிரியர்களைக் கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா? தமிழக பெண்களுக்கு 'ஸ்வீட் நியூஸ்' சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி!
எடப்பாடி பழனிசாமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com