#BREAKING : சி.வி.சண்முகம், வேலுமணி கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்..!!

Edappadi Palanichami
EPS
Updated on

சென்னையில் உள்ள தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும், அதிமுகவின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியினர் மீது, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றிய கருத்துக்களை கேட்டு கொண்டு இருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. எதிர்க்கட்சியை வரிசையில் அமர்ந்து வந்த அதிமுக, தற்போது எந்த பக்கம் அமர்வது என்ற சூழலில் உள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்வியின் மூலம் 2 வது இடத்திலிருந்து 3 வது இடத்திற்கு சென்ற அதிமுக, நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் போதே எடப்பாடி பழனிச்சாமியின் மீதான அதிருப்தி அதிமுகவினர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த தோல்விக்கு பின்னர் தவெக கட்சிக்கு ஆதரவு கொடுத்து , அதன் மூலம் கூட்டணி அரசில் பங்கு வைக்க அதிமுகவில் உள்ளவர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனால் , எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையை ஏற்க வில்லை.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் பாண்டிச்சேரி அருகே உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த விடுதிக்கு வந்து எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்றார். அதிமுக தனது ஆதரவு நிலைப்பாட்டை பற்றி எதுவும் கூறாததால் , தவெக தலைவர் விஜய் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோர முடிவு செய்தார்.

இதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் , விடுதலை சிறுத்தை , ஐயூஎம்எல் கட்சிகளிடம் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு சில நாட்கள் இழுபறிக்கு பின்னர் அவர்கள் விஜயை ஆதரித்தனர். அதன் பின்னர் முதல்வராக பதவி ஏற்ற விஜய் இன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

நேற்று எடப்பாடி பழனிச்சாமி தவெகவிற்கு ஆதரவாக அதிமுகவினர் யாரும் ஆதரவாக செயல்பட்டால் , அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அதே நேரம் வேலுமணி மற்றும் சிவி.சண்முகம் தலைமையில் கூடியிருந்த பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ,அதிமுக அணியினர் விஜயை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

இன்று சட்டமன்றத்தில் அதிமுகவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கொண்ட அணி விஜய்க்கு ஆதரவாக வாக்களித்து, அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உதவியது. இதனால், கடுமையான கோபம் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் இடம் சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். தங்கள் அணி தான் உண்மையான அதிமுக என்றும் தங்களையே சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த சுழலில் தனக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் சிவி.சண்முகம் , வேலுமணி மீது நடவடிக்கை எடுப்பதற்காக , இந்த ஆலோசனை கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு ஆதரவாக உள்ளவர்களின் கட்சிப் பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நத்தம் விஸ்வநாதன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நீக்கம்

logo
Kalki Online
kalkionline.com