அடுத்து ஒரு முறைகேடு சிக்கலில் எடப்பாடி பழனிச்சாமி: மாட்டி விட்ட சிஏஜி ரிப்போர்ட்!

அடுத்து ஒரு முறைகேடு சிக்கலில் எடப்பாடி பழனிச்சாமி: மாட்டி விட்ட சிஏஜி ரிப்போர்ட்!

மிழ்நாட்டில் கடந்த 2016 – 2021ம் ஆண்டில் ஆட்சியில் இருந்து அதிமுக அரசு பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்திருப்பதாக புகார் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போதைய ஆட்சியில் வழக்குகள் பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முக்கியமாக டெண்டர்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக, அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு அவர் கொடுத்து ஊழல் செய்திருப்பதாக புகார் கூறப்பட்டது.

இந்த டெண்டரில் மொத்தம் 4800 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக புகார் வைக்கப்பட்டது. அதன்படி வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் செய்யப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோவுக்கு செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. அதோடு, பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று பல புகார்கள் வைக்கப்பட்டன. இந்தப் புகார்களின் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில்தான் தற்போது, கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விஷயங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. அதன்படி, ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன. அதை இவர்களும் ஏற்றுக்கொண்டு உள்ளனர். அதோடு இந்த டெண்டர்கள் டைப்பிஸ்ட்டுகள் மற்றும் இளநிலை பொறியாளர்களைக் கொண்டு விடப்பட்டு உள்ளன. ஒரே கம்பெனிகள் இந்த டெண்டர்களில் கலந்து கொள்ள வேறு கம்பெனிகள் அதில் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் உள்ளே இருப்பவர்கள் சிலரே டெண்டருக்கு விண்ணப்பம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நடத்தும் வெவ்வேறு நிறுவனங்களுக்கு ஒரே சமயத்தில் டெண்டர் வழங்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் கிடைக்கும் லாபத்தை பங்கிட்டுக்கொள்ள வர்த்தக குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட விடப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு 14 கோடி ரூபாய் என்றும், டெண்டர்களின் மதிப்பு 15 கோடி ரூபாய் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. அதேபோல், 51 கோடி ரூபாய் வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அந்த சமயத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, நெடுஞ்சாலை துறையை தம்வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளன.

ஒட்டன்சத்திரம் – தாராபுரம் - அவினாசிபாளையம் 4 வழிச்சாலை 715 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1500 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல், திருநெல்வேலி – செங்கோட்டை - கொல்லம் 4 வழிச் சாலை விரிவாக்கப் பணிக்காக 720 கோடி ரூபாய் ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டது.

மொத்தத்தில் 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் புகார் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்த நிலையில், உச்ச நீதிமன்றம் இதில் இடைக்கால தடை விதித்தது. இந்த உச்ச நீதிமன்ற இடைக்கால தடை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 2ந் தேதி விசாரணைக்கு வரும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com