கல்வியே ஆயுதம்: தேர்வில் தடம் பதித்த மாணவிகள் யார் யார்...?

கல்வியே ஆயுதம்: தேர்வில் தடம் பதித்த மாணவிகள் யார் யார்...?

நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி தமிழ், ஆங்கிலம், கணக்குப்பதிவியல், கணினி பயன்பாடு, பொருளியல், வணிகவியல் என அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். மொத்தம் 600/600 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்திலேயே முதலிடம் பெற்ற மாணவியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் அவருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என உறுதியளித்ததோடு மட்டுமில்லாமல், அவரின் உயர் கல்வி செலவையும் அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார். 

சாதித்த திருநங்கை மாணவி:

து ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் தேர்வெழுதிய திருநங்கை மாணவியான ஷ்ரேயா, 600 க்கு 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், தமிழகத்திலேயே பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி ஷ்ரேயா தான். பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவரை பாராட்டியும், இனிப்புகள் ஊட்டியும் மகிழ்ந்தனர். 

பள்ளியில் தன்னை ஒரு திருநங்கை என ஒதுக்கி வைக்காமல், அனைத்து மாணவர்களையும் போல் ஒன்றாக பார்த்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியைக்கு நன்றி தெரிவித்த ஸ்ரேயா, பி. பி. ஏ படித்துவிட்டு எம்பிஏ படிக்க வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். சிறுவயது முதலே அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பதால், தன்னுடைய மேல் படிப்புக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி:

தேபோல் மற்றொரு மாணவியான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிஜா, தனது வேதியியல் தேர்வு நடைபெற்ற நாளன்று தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தந்தையின் இறப்பு அவரை அதிகமாக காயப்படுத்தியிருந்தாலும், பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திட்டவட்டமாக இருந்தார். ஒருபுறம் தந்தையின் இழப்பு, எப்படியும் தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், மனதைத் தளர விடாமல் சோகத்தை மறைத்து தேர்வையும் எழுதி முடித்தார் கிரிஜா. 

இதனையடுத்து நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் மாணவி கிரிஜா 600க்கு 479 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். தந்தை இறந்த அன்று அவர் எழுதிய வேதியியல் தேர்வில் நூற்றுக்கு 81 மதிப்பெண்கள் பெற்று தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளதாக பெருமையுடன் கூறினார். தந்தை இல்லாததால் தனது கல்லூரிக்கு சென்று படிக்க முடியாத சூழலில் இருப்பதாகவும். அதனால் தனது மேற்படிப்புக்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஒரு குறிக்கோளை மனதில் வைத்துக்கொண்டு விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால், சாதித்துக் காட்டலாம் என்பதற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இம்மாணவிகளை நாம் அனைவரும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com