ஹையா.. ஜாலி; துபாய்க்கு அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா!

அரசுப் பள்ளி மாணவர்கள்-அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசுப் பள்ளி மாணவர்கள்-அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காகத் துபாய் செல்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தைவும் மாண்வர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 45 மாணவர்களுக்கு மேற்படிப்பை ஐஐடியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகஅரசுப் பள்ளிகளுக்கிடையே நடத்திய வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களைச் சர்வதேச கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி வினாடி வினா போட்டிகளில் வென்ற 68 மாணவ-மாணவிகள் துபாய்க்குக் கல்விச் சுற்றுலா செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மாணவர்களுடன் அவர்களது ஆசிரியர்களும், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷூம் செல்கின்றனர். துபாயில் மிக உயர புர்ஜ் கலீபா கட்டிடம், ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களை இந்த மாணவர்கள்  சுற்றிப் பார்க்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com