இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் பங்கேற்பு!

எகிப்து அதிபர் அப்தல் ஃபதா எல்சிசி
எகிப்து அதிபர் அப்தல் ஃபதா எல்சிசி
Published on

நாட்டில் ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபர் அப்தல் ஃபதா எல்சிசி பங்கேற்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்வையிட பல நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப் படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் 5 மத்திய ஆசிய குடியரசு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் டெல்லியில் நடந்த இந்தியா - மத்திய ஆசிய மாநாட்டில் பங்கேற்றனர்.

அந்த வகையில் 2023-ம் ஆண்டு நடைபெறும் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்கிறார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் இந்த அழைப்பை, எகிப்து அதிபர் அல்-சிசியிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வழங்கியதாகவும், அந்த அழைப்பை எகிப்து அதிபர் ஏற்று இந்தியாவுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் பங்கேற்க விருப்பது இதுவே முதல் முறை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு இந்தாண்டுடன் 75 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி-20 கூட்டத்தில் விருந்தினராக கலந்து கொள்ளவும் எகிப்துக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com