எல் நினோ விளைவுகள் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம்!

எல் நினோ விளைவுகள் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம்!
Published on

இந்தியாவின் விவசாய உற்பத்தியை எல் நினோ விளைவுகள் கடுமையாகப் பாதிக்கும் என்கிறது அமெரிக்கா ஆய்வு. இதனால் விளைபொருட்களின் விலை பெரிய அளவில் உயர்ந்து நுகர்வோர் பணவீக்கத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு எல் நினோ-வுக்கான கணிப்பு 55-60% ஆக உள்ளது என எச்சரிக்கிறது.

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ மற்றும் லா நினா என்கிற காலநிலை மாற்றங்கள் உள்ளது. இவை இரண்டும் உலகளாவிய காலநிலையை பாதிக்கும் வல்லமை கொண்டது.

இந்த நிலையில் எல் நினோ விளைவுகள் மூலம் இந்தியாவில் உணவு பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற கவலைகள் நாடு முழுவதும் அதிகமாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் விவசாய உற்பத்தி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் வேளையில் பணவீக்கம் மிகவும் உயர்வாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) 2023 ஆம் ஆண்டின் ஜூன்-டிசம்பர் மாதங்களில் 55-60% வாய்ப்புகள் உடன் எல் நினோ உருவாகக்கூடும் என்று கணித்துள்ளது. இது கட்டாயம் ஜூன்-அக்டோபர் மாதங்களில் இந்தியப் பருவமழையை மோசமாகப் பாதிக்கும். இதேபோல் எம்கய் குளோபில் இன் ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் வறட்சி உருவான அனைத்து ஆண்டுகள் மற்றும் நிகழ்வுகளும் எல் நினோ ஆண்டுகளில் இருந்தன. இந்த ஆண்டு வறட்சி மோசமான விலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பருவமழை குறைந்து உணவு பொருட்கள் விலை அதிகரிக்கும் என்ற எல் நினோ கணிப்பு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பெரும் வறட்சி போன்றவை இல்லை, இதற்கு மாறாக அரசி முதல் பருப்பு, காய்கறி வரை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளோம்.

இந்த நிலையில் இந்தியாவில் ஜூன்-டிசம்பர் மாதங்களில் 55-60% வாய்ப்புகள் உடன் எல் நினோ பாதிப்பு இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையை பாதிப்பது மட்டும் அல்லாமல் ஏழை மக்களை மேலும் வறுமையில் தள்ளும் பெரும் பாதிப்பு உள்ளது. இதன காரணமாக உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை பாதிக்கும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com