காங்கிரஸ் தலைவர் கார்கேவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!!

Election commission sent Notice
ECI Notice To kharge
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே , நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது , பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். அத்துடன் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக கட்சியையும் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக இன்று தனது அடையாளத்தை இழந்துவிட்டது. அது பாஜகவின் அடிமை கூட்டணி கட்சியாக மாறி உள்ளது. அதனால் தமிழகத்தின் நலன்களை அதிமுக பாதுகாக்க முடியாது. பாஜகவை எதிர்த்து போராட ஸ்டாலின் போன்ற எழுந்து நின்று போராடும் தலைவர்கள் தான் நமக்கு தேவை என்று பேசி இருந்தார்.

கார்கேவின் இந்த பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த பாஜகவின் மூன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று , கார்கே மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி , நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை தேசிய தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கேவின் இந்த கருத்துகள் பிரதமர் மோடிக்கு எதிரானது மட்டுமல்ல , இந்தியாவில் வசிக்கும் 140 கோடி மக்களுக்கும் ஏற்பட்டுள்ள அவமானம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

பாஜக மத்திய அமைச்சர்களின் புகாரை அடுத்து , தேர்தல் ஆணையம் மல்லிகார்ஜுன கார்க்கேவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் , டெல்லி காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com