விஜய்யின் அடுத்த மூவ்..! சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் முக்கியப் பெயர்கள் இதோ..!

TVk leader vijay
TVk leader vijay
Updated on

கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு 10ம் தேதி விஜய் ஆஜராக சம்மன் வந்துள்ளது. தற்போது பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால், தான் அந்த தேதியில் பங்கேற்க இயலாது என்றும் அடுத்த 15 நாட்களுக்குப் பிறகு சிபிஐ குறிப்பிடும் தேதியில் பங்கேற்க இருப்பதாகவும் விஜய் தரப்பில் சிபிஐக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலுக்கு 234 தொகுதிகளிலும் தவெக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை 6ம் தேதி முதல் கொடுக்கலாம் என்றும், பனையூர் அலுவலகத்தில் 14 ஆம் தேதி வரை மனுக்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். பனையூரில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் மக்களை ஆன்லைனில் மனுக்களை பதிவிறக்கம் செய்ய சொல்லி இருந்தது.

சட்டப்பேரவை தேர்தலில் தவெகவில் விருப்ப மனு அளித்த முக்கிய நிர்வாகிகளை இன்று சந்தித்து நேர்காணல் செய்ய உள்ளார். ஏராளமானோர் விருப்ப மனு அளித்த நிலையில், விஜய் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பணியாற்றிய நிர்வாகிகள் இன்றைய நேர்காணலில் பங்கேற்கின்றனர். சேலம், சென்னை புறநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்ட தவெக செயலாளர்களும் நேர்காணலில் பங்கேற்கிறார்கள். இன்று நேர்காணலில் பங்கேற்பவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

விருப்ப மனு கொடுத்துள்ள மாவட்டச் செயலாளர்கள் சேலம் பார்த்திபன், சென்னை புறநகர் ஈ.சி.ஆர் சரவணன், தஞ்சாவூர் விஜய் சரவணன், புதுக்கோட்டை முகமது பர்வேஸ், கோவை தெற்கு மாவட்டம் விக்னேஷ், அரியலூர் சிவா, திருவள்ளூர் எம்எல் பிரபு உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் வருகின்றனர். அத்துடன் மாநில நிர்வாகிகள் என்.ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
#BIG BREAKING : மக்களே உஷார்..! நாடு முழுவதும் அமலுக்கு வந்தது ESMA சட்டம்…!!
TVk leader vijay
logo
Kalki Online
kalkionline.com