பறக்கும் படை அதிரடி: கனிமொழி எம்.பி-யின் வாகனத்தில் தீவிர சோதனை..!

KANIMOZHI
KANIMOZHI
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

சட்டமன்ற தேர்தலுக்கு பரப்பரை மேற்கொள்வதற்காக , திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது வாகனத்தை வழிமறித்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் , பல அரசியல்வாதிகளின் பரப்புரை வாகனங்களும், அவர்களின் தனிப்பட்ட வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதுபோலவே கனிமொழியின் வாகனமும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.  தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா ? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறது. கனிமொழி வாகனம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவர் பறக்கும் படை அதிகாரிகளுக்கு நன்கு ஒத்துழைத்துள்ளார்.

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த சோதனையில் , சந்தேகத்திற்கு இடமான எந்த பொருளும் பணமும் கைப்பற்றப்படவில்லை. சோதனை முடிந்த பின்னர் பறக்கும் படை அதிகாரிகள் கனிமொழியை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர். இதற்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் , மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வாகனங்களும் பறக்கும்படி அதிகாரிகளால் சோதனைக்குள்ளாகப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com