

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுப்பதிவாகி இருந்தது. பிறகு மதியம் 1 மணி நிலவரப்படி, ஓட்டுப்பதிவு 56.81 சதவீதமாக அதிகரித்தது.இந்த ஓட்டுப்பதிவு சதவீதம் மதியம் 3 மணிக்கு 70 சதவீதமாக உயர்ந்தது.
இன்று மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை 3,25,79,329 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.
விழுப்புரம் 71.65%,
சேலம் 75.79%,
நெல்லை 62.84%,
திருவள்ளூர் 68.07%,
நீலகிரி 63.67%,
செங்கல்பட்டு 69.46%
சென்னையில் 68.13% சதவீத வாக்குள் பதிவாகியுள்ளன.