

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முன்னோட்டமாக வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தத்தை SIR போன்ற புதிய வாக்காளர் பட்டியல் நடவடிக்கைகள் மூலம் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அறிவோம். இந்நிலையில் இந்திய மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறப் போகும் தேர்தல் மீதான ஆயத்தப்பணிகள் துவங்கியுள்ளது.
தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner of India) ஞானேஷ் குமார் (Gyanesh Kumar)அடுத்த மாதம் தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் 5 மாநிலங்களுக்கும் அடுத்த மாதம் நேரடியாக சென்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் தமிழ்நாடு ,கேரளா ,புதுச்சேரியில் தேர்தலை நடத்தி முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் இந்த முறை இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஒரே கட்டமாக நடைபெற்ற தமிழ்நாட்டின் தேர்தல் தற்போது இரண்டு கட்டங்களாக பிரிக்கப்படும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைத் துணை தேர்தல் ஆணையர் மனிஷ்கார்க் தலைமையில் டெல்லியில் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்க மற்றும் அசாம் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர். இதில் தமிழ்நாடு ,புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
தற்போது தேர்தல் ஆணையம் மாநிலத்தில் வாக்காளர் தொகுப்புகள், ஆலோசனை கூட்டங்கள், SIR/TN பதிப்புகள் போன்ற தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூவமாக தீவிரமாக மேற்கொண்டுள்ளது .இது தேர்தல் அதிகாரிகளின் செயல்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே. தேர்தல் நாள் நெருங்கும் முன் இன்னும் பல தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் மீதான செயல்பாடுகள் ஆகியவை தீவிர படுத்தப்படும்.
இந்த 5 மாநிலங்களின் தேர்தல் களம் குறித்து திரட்டிய தகவல்கள் இங்கு :
அசாம் மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா (BJP) தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது; அதேவேளையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் (INC) அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சி செய்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக (DMK) அரசுக்கும், எதிர்க்கட்சியான அதிமுக (AIADMK) மற்றும் பாஜக (BJP) கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி உள்ளது. இவற்றுடன், புதிய கட்சிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பிரபல நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK), தேர்தல் கூட்டணி மாற்றங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.
கேரளாவில் LDF (சிபிஎம் தலைமை) மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் நிலையில், UDF (காங்கிரஸ் கூட்டணி) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வழக்கம்போல AINRC + NDA கூட்டணிக்கும், DMK + Congress கூட்டணி மற்றும் இதர கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
"அத்துடன், நாட்டின் எதிர்காலத் தலைமையைத் தீர்மானிக்கப் போகும் இந்த 5 மாநிலங்களின் தேர்தல், இதுவரை கண்டிராத பல சுவாரசியங்களைத் தரக்கூடும். இதனால், மக்கள் மிகுந்த ஆவலுடன் நல்லதொரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்."