காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலி. பெண்ணின் உயிர் பலி!


காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலி. பெண்ணின் உயிர் பலி!
Published on

ஞ்சப்பள்ளி அருகே சட்டவிரோதமாக அமைத்த மின்வெளியில் சிக்கி பெண் பலியானார். இது தொடர்பாக அந்நிலத்தின் உரிமையாளரான விவசாயி கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஞ்சப்பள்ளி சொரக்குறிக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல். மனைவி ராமு. வயது 55. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராமு  100 நாள் வேலைத்திட்டத்தில் கடந்த 24 ஆம் தேதி பாளையம் கிராமம் அருகே வேலை செய்துள்ளார். அப்போது மண்வெட்டியை பெரியமுனிராஜ் என்பவரது தோட்டத்தின் அருகே வைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

    மறுநாள் காலை 25ஆம் தேதி காலை மண்வெட்டியை எடுத்து வருவதற்காக பெரியமுனிராஜ் தோட்டத்தின் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.  இரவாகியும் நெடு நேரமாகியும் ராமு வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடிச்சென்ற போது பெரிய முனிராஜின் தோட்டத்தின் அருகே அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

       இது குறித்த தகவல் அறிந்ததும் அங்கு வந்த பஞ்சப்பள்ளி போலீசார் உடனடியாக மின் ஊழியர்கள் மூலம் மின்சாரத்தை துண்டித்து விட்டு நேரில் சென்று பார்த்தனர். அப்போது பெரிய முனிராஜ் சட்ட விரோதமாக காட்டு பன்றிக்காக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி ராமு பலியானது தெரியவந்தது. இதை அடுத்து அவரது உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேத பரிசோதனை செய்து அவரது உடல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ராமு மகன் முரளி அளித்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயி பெரிய முனிராஜை கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

      கடந்த ஆறாம் தேதி மாரண்டஅள்ளி அருகே மூன்று காட்டு யானைகள் மின்வேலியில் சிக்கி பலியாகி சோகத்தை தந்த நிலையில் விவசாயி சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி பெண் பலியான சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

     இது போன்ற கவனக்குறைவான மரணங்கள் பற்றிய செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். விவசாயிகள் சட்டப்படி பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்து தங்கள் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும். இது போன்ற சட்டத்திற்கு புறம்பான மின்வேலிகளை அமைப்பது உயிர்பலி வாங்கும் குற்றமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com