சென்னை மக்களே கவனம்.. இந்த ரூட் ரயில் சேவை மாற்றம்!

ரயில்
ரயில்Intel
Published on

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்காக, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்கள், வரும் 27ம் தேதி முதல், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும், என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் பலரும் பொதுபோக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ட்ராபிக் இருப்பதால் பலரும் ரயில் சேவையையே நம்பி இருக்கின்றனர், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் தினசரி 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர்.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க வேண்டும், என பயணிகள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4வது பாதை அமைக்கும் திட்ட பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக, சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வரும் 27ம் தேதி முதல், சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com