சீனாவுக்கே ஆலோசனை கூறிய எலான் மஸ்க்.

சீனாவுக்கே ஆலோசனை கூறிய எலான் மஸ்க்.
Published on

சீனர்கள் எப்பொழுதும் எல்லா விஷயங்களிலும் உஷாராகவே இருப்பார்கள். இவற்றிற்கு மத்தியில் அவர்களுக்கு புதிய ஐடியா கொடுத்தால் சும்மா இருப்பார்களா? உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், Ai தொழில்நுட்பம் சார்ந்த பல யோசனைகளை சீன அரசுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

தனது நேரம் முழுவதையும், ட்விட்டர் நிறுவனத்திலேயே செலவிடுவதால் மற்ற நிறுவனங்களான 'ஸ்பேஸ் எக்ஸ்', 'டெஸ்லா' போன்றவற்றின் மீது கவனம் செலுத்த முடியவில்லை என்பதற்காக, புதிய சிஇஓ-வை நியமித்தார் எலான் மஸ்க். இதைத்தொடர்ந்து இனி அவர் தனது சொந்த வேலைகளில் கவனம் செலுத்துவார் என நினைத்தால், சீனாவிற்கு ஜாலியாக பயணம் செய்துள்ளார். 

சமீபத்தில் இந்த பயணம் தொடர்பாக ஜனநாயக கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கென்னடி ஜூனியரிடம் நேரடியாக பேசியபோது, தன் சீன பயணத்தைப் பற்றி மேலோட்டமாகத் தெரிவித்தார். "எனது சமீபத்திய சீன பயணத்தில் சீனாவின் பல மூத்த தலைமை அதிகாரிகளை சந்தித்தேன். அப்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும், அதற்கான மேற்பார்வைகள் ஒழுங்குமுறைகளின் அவசியம் குறித்தும் பயனுள்ள விஷயங்களை உரையாடினோம். மேலும், அந்த பேச்சுவார்த்தையினால், சீன அரசாங்கம் ஏஐ தொடர்பான ஒழுங்குமுறையை விரைவில் கொண்டு வரவிருக்கிறார்கள்" என எலான் மஸ்க் கூறினர். 

அதாவது Ai மிகவும் ஆபத்தானது அதை ஜாக்கிரதையாகக் கையாளுங்கள் என சீன அரசாங்கத்திற்கே யோசனை கூறியுள்ளார் எலான் மஸ்க். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான OpenAi-ன் அசுர வளர்ச்சிக்கு பிறகு Ai தொழில்நுட்பம் சார்ந்த அபயங்களை எப்படிக் குறைக்கலாம் என பல நாட்டு அரசாங்கங்கள் பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் அந்த பட்டியலில் சீனாவும் இணைய இருக்கிறது. இந்த Ai தொழ்நுட்பத்தை சீனா ஆதரிக்கிறதா இல்லையா என்ற கேள்வி பலருக்கு எழுந்து வந்த நிலையில், சமீபத்தில் சைபர்ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் சைனா (CAC) என்ற நிறுவனம், சீன அரசாங்கம் ஏஐ கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது. 

சீன அரசாங்கம் நம்பகத்தன்மை வாய்ந்த மென்பொருட்கள், கருவிகள் மற்றும் டேட்டா ரிசோர்ஸ்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை பயிற்றுவிப்பதற்காக பயன்படுத்தப்படும் டேட்டாக்களின் சட்டபூர்வதன்மைக்கு, அதை உருவாக்குபவர்களே பொறுப்பாளர்கள் எனவும், ஜெனரேட்டிவ் எஐ-க்கான அல்காரிதங்களை வடிவமைக்கும்போது, அதில் எவ்விதமான பாகுபாடுகளும் இருக்கக்கூடாது எனவும் CAC எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த முடிவால் சீனாவும் இனி செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது முன்னெடுப்பை எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com