எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர்!

எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர்!
Published on

டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் ஆகிறார் . இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

ஆஸ்டினை சேர்ந்த எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெர்னார்டு அர்னால்ட் எலான் மஸ்க்-ஐ கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். லூயிஸ் விட்டன், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவியவர் பெர்னார்டு அர்னால்ட். தற்போது பெர்னார்டு அர்னால்டு LVMH பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பெரும் சரிவு நிலை நிலவி வந்த போது, பெர்னார்டு அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் ஆனார்.

கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது.பிரெஞ்சு வியாபாரியான 74 வயது பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே உலகின் பணக்காரர் யார் என்பதில் எப்போதுமே கடும் போட்டி நிலவி வருவது வழக்கம்.

ஆனால் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார். இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com