தன் மகனுக்கு சந்திரசேகர் என பெயர் வைத்த எலான் மஸ்க்!

Elon Musk named his son Chandrasekhar.
Elon Musk named his son Chandrasekhar.

மீபத்தில் லண்டனில் நடந்த AI Safety Summit-ல் இந்திய எலக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது அங்கு நடந்த உரையாடலின் நடுவே ட்விட்டர், டெஸ்லா, ஸ்பேக்ஸ் X நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் தனது மகனின் Middle name சந்திரசேகர் எனக் கூறியுள்ளார். இந்த பெயர் இந்திய - அமெரிக்க இயற்பியலாளரான பேராசிரியர் சுப்பிரமணிய சந்திரசேகரின் நினைவாக தன் மகனுக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

யார் இந்த சுப்பிரமணியன் சந்திரசேகர்?

சுப்பிரமணியன் சந்திரசேகர் என்பவர் 1910ம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி லாகூர் பஞ்சாபில் பிறந்தவர். ஒரு தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் இயற்பியல் துறையில் சிறந்து விளங்கினார். இதனால் நட்சத்திரங்களின் கட்டமைப்பு மற்றும் பரிணாமம் குறித்த இவரது ஆய்வுக்காக 1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

physicist Prof S Chandrasekhar
physicist Prof S Chandrasekhar

மேலும் இவர் உலகளவில் பல சர்வதேச இயற்பியல் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எலான் மஸ்க்?

இதுவரை மூன்று முறை திருமணம் செய்துள்ள 52 வயதான எலான் மஸ்க். மேலும் இரண்டு பேருடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துள்ளார். இவருக்கு மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு Neuralink நிறுவனத்தின் இயக்குனரான Shivon Zilis என்பவருடன் இவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளுக்குதான் மிடில் நேமாக சந்திரசேகர் என்ற பெயரை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பகிர்ந்துள்ளார்.

ஆனால் எலான் மஸ்க் தனது டெஸ்லா தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்கவும், நியூரலிங்க் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான அனுமதி பெறவும் முயன்று வரும் நிலையில், தன் மகனுக்கு இந்தியரின் பெயரை சூட்டி இருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com