நீண்ட காலமாக பயன்படுத்த படாத ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படும் எலான் மஸ்க் அதிரடி!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் டிவிட்டர் கணக்குகள் குறித்து அதிரடி அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதாவது நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை நீக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தில் அடுக்கடுக்காக அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் எலான் மஸ்க் அந்த வரிசையில் இப்போது மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதில் ஆட்குறைப்பு, 'புளூடிக்' வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியபோதும் எலான் மஸ்க் அதில் இருந்து பின்வாங்கவில்லை. சமீபத்தில், டுவிட்டர் 'லோகோ'வான, குருவியை மாற்றி, ஜப்பானின் முக்கிய நாய் இனமான 'ஷிபு' என்ற நாயின் புகைப்படத்தை புதிய 'லோகோ'வாக வைத்தார்.

பயன்பாட்டில் இல்லாத டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ள இந்த செய்தி பரபரப்பை மட்டுமல்லாமல், ட்விட்டரை பயன்படுத்தாமல் இருக்கும் யூசர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான யூசர்கள் தங்களது ட்விட்டரை மீண்டும் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் கணக்குகளையும் ஆர்ச்சிவ் லைனுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே இது தொடர்பாகக் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரு கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தொடர்ந்து ஆறு மாதங்கள் செயல்படாமல் இருக்கும் கணக்குகள் தான் செயல்படாத கணக்குகளாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அந்த அவகாசம் ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் அச்சுறுத்துவது போன்ற இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தனது அதிருப்தியைப் பதிவு செய்யும் வகையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று ட்விட்டர் கணக்கில் இருந்து தானாகவே வெளியேறியுள்ளது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 45 கோடி பயனர்களைக் கொண்டுள்ள சமூக ஊடகமான ட்விட்டர் இப்படி அதிரடியாக அறிவிப்பினை வெளியிட்டு வருவது அதன் கோடி கணக்கான பயனர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com