இத்தாலியில் நடைபெறவிருக்கும் எலான் மஸ்க் Vs மார்க் ஜூக்கர்பெர்க் கூண்டு சண்டை.

இத்தாலியில் நடைபெறவிருக்கும் எலான் மஸ்க் Vs மார்க் ஜூக்கர்பெர்க் கூண்டு சண்டை.
Published on

லகப் பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இடையேயான சண்டை, லாஸ்ட் வேகாஸில் நடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தற்போது அந்த சண்டை இத்தாலியில் நடைபெறும் என எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். 

டெஸ்லா சிஇஓ எலான் மாஸ்க் மற்றும் மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூண்டு சண்டை, இத்தாலியில் ரோம் கொலோசியத்தில் நடைபெறும் என ட்விட்டர் தளத்தில் நேற்று எலான் மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு ட்வீட்டில் 'லைப் ஆஃப் ப்ரையன் கொலோசியம் சண்டை' என்ற தலைப்பில் 1 நிமிடம் 30 வினாடி கொண்ட யூடியூப் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். மேலும் 'எனது சகிப்புத்தன்மையில் நான் வேலை செய்ய வேண்டும்' என்றும் அதில் எழுதி இருந்தார். இதற்கு முன்னதாக இந்த சண்டை லாஸ்ட் வேகாசில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இத்தாலியில் நடக்கும் செய்தி வெளிவந்ததும், மக்கள் மத்தியில் இந்த சண்டை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஜுக்கர்பெர்க் 5 அடி 7 அங்குலம் உயரமும், சுமார் 65 கிலோ எடையும் கொண்டவர். எலான் மஸ்க் 6 அடி 2 அங்குலம் உயரமும், தோராயமாக 104 கிலோ எடையும் கொண்டவர். இருப்பினும், இந்த இரண்டு தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளும் தங்களின் உயரம் மற்றும் எடை வேறுபாடுகளால் கவலைப்படுவது போல் தெரியவில்லை. எலான் மஸ்க் தன்னுடைய உடலமைப்பைப் பயன்படுத்தி ஜுக்கர்பெர்கை வெல்ல முடியும் என உறுதியாக இருக்கிறார். 

சமீபத்தில் பாட்காஸ்டர் மற்றும் யூடியூபரான குத்துச்சண்டை பயிற்சியாளர் லெக்ஸ் ப்ரைமேன் எலான் மஸ்குக்கு பயிற்சி அளித்ததைப் பற்றி தெரிவித்திருந்தார். அதில் கால்களிலும் தரையிலும் அவருடைய வலிமை, சக்தி மற்றும் திறமையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என தெரிவித்திருந்தார். இவர் மெட்டா நிறுவனருக்கும் பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்க் ஜுக்கர்பெர்க், ஜியூ ஜிட்சு தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றவர். சில போட்டிகளில் கலந்து பதக்கங்களையும் வென்றுள்ளார். சமீபத்தில் தான் 100 புல் அப்கள், 200 புஷ் அப்கள் மற்றும் 300 ஸ்குவாட்ஸ் முடித்து, ஒன்பது கிலோ எடையுள்ள பையை மாட்டிக் கொண்டு, ஒரு மைல் ஓடும் சவாலை முடித்து இணையத்தைக் கவர்ந்தர். 

ஜுக்கர் பெர்க்கின் தற்காப்புக் கலை பயிற்சியாளர் இந்த போட்டியில் யார் வெற்றி பெற முடியும் என்பது குறித்து எனக்கு உறுதிபட கூற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com