“முதலாளிகள் விற்பனைக்கு”- சீனாவில் சூப்பர் சேல்!

Owner sale
Owner sale
Published on

பொருட்களை விற்பனைக்கு விட்டுப் பார்த்திருப்போம். ஆனால், சீனாவில் ட்ரெண்டிங் பொருட்களை விற்கும் ஈ-காமர்ஸில் தங்கள் முதலாளிகள், சக ஊழியர்கள் என வேலை ஆட்களை விற்கிறார்கள் என்றால், நம்பமுடிகிறதா?

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உள்ளது. விலங்குகள் தனக்குப் பிடிக்காத வேலையை எவ்வளவு காசு கொடுத்தாலும் அழுத்தம் கொடுத்தாலும் செய்யாது. ஆனால், மனிதர்களுக்குப் பிடிக்காத வேலையையும் சூழ்நிலை செய்ய வைத்துவிடும். அப்படி பிடிக்காத வேலையை செய்யும்போது கட்டாயம் நமக்கு பரிசாக மன அழுத்தம் உண்டாகும்.

இது ஒருபக்கம் இருக்க. மற்றொரு பக்கம் பாஸ், சக ஊழியர்கள். டாக்ஸிக்கான பாஸ் மற்றும் சக ஊழியர்கள் கிடைக்கும்போது வேலை சூழலே நெகட்டிவாக மாறிவிடும்.

இந்த மன அழுத்தத்தை சமாளிக்க பல பேர் பல வழிகளை கையாளுவார்கள். சிலர் பாட்டுக் கேட்பார்கள், மனதில் தோன்றுவதை எழுதுவார்கள், மனம்விட்டு பேசுவார்கள், பொழுதுபோக்கு அம்சங்களை கடைப்பிடிப்பார்கள்.

அப்படிப்பட்ட வழிகளில் ஒரு வழிதான் புதுமையாக இப்போது ட்ரெண்டாகி வருகிறது. அதாவது அங்கு செகண்ட் ஹேண்ட்டில் பொருட்களை விற்பனை செய்யும் ஈ-காமர்ஸ் தளங்களில் ஊழியர்கள் தங்கள் முதலாளிகள், சக ஊழியர்கள், அவ்வளவு ஏன் தங்கள் வேலைகளைக் கூட விற்பனைக்குப் பட்டியலிடுகிறார்கள். பிரபல அலிபாபா நிறுவனத்தின் செகண்ட் ஹேண்ட் ஈ-காமர்ஸ் தளமான சியான்யூ என்ற தளத்தில் தான் இந்தக் கூத்து நடந்து வருகிறது. அங்குப் பலரும் வேலை ஏற்படுத்தும் மன அழுத்தத்தைக் குறைக்க இதுபோல தங்கள் முதலாளிகளை விற்கிறார்கள்.

யார் மீது தங்களுக்கு கோபம் வருகிறதோ, எந்த பாஸ் மற்றும் ஊழியர்கள் தங்களை மிகவும் மோசமாக நடத்துகிறார்களோ, அவர்களையெல்லாம் சேல் செய்கிறார்கள். அப்படி தான் பெண் ஒருவர் தனது வேலையை ₹ 91,000க்கு பட்டியலிட்டுள்ளார். இதில் மாதம்₹ 33,000 சம்பளம் கிடைக்கும் என்றும் மூன்று மாதங்களில் போட்ட காசை திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்றும் பதிவிட்டுள்ளார். இவர் மட்டுமின்றி இவரைப் போலவே பலரும் தங்கள் முதலாளிகளை விற்பனைக்கு பட்டியிலிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மேல் படிப்புக்கு ஆஸ்திரேலியா போகணுமா?அம்மாடியோவ்! கட்டணம் இவ்வளவாமே!
Owner sale

இதன்மூலம் யாரும் யாரையும் வாங்கவும் மாட்டார்கள், விற்கவும் மாட்டார்கள். அதேபோல் பயனாளர்களும் ஆர்டர் செய்ய மாட்டார்கள். ஆர்டர் செய்தாலும் கேன்சல் செய்யப்படும். ஆனால், ஒரு மன திருப்தி கிடைத்து மீண்டும் முழு எனர்ஜியுடன் வேலைப் பார்ப்பார்கள் என்பது நம்பிக்கை.

இதனால், எனர்ஜியாகுதோ இல்லையோ, ஆனால், சீனா அவ்வளவா தன் ஊழியர்களை வேலை வாங்குகிறது? என்ற கருத்துகள் வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com