இம்மாதம் 18-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!

வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தனியார் துறைகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இம்மாதம் 18-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

-இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்ததாவது:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் டிசம்பர் 19-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண சேவையும் செய்யப்படும். அந்த வகையில் அவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களைப் பற்றிய  விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com