அறுபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சுலபமாக அரசு வேலை!

அறுபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சுலபமாக அரசு வேலை!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக, ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாதஸ்வரம், தவில், தாளம், சுருதி, உதவி அர்ச்சகர், இலை விபூதிபோத்தி போன்ற பணிகளைச் செய்ய விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்க வேண்டியது அவசியம். நாதஸ்வரம், தாளம், தவில், சுருதி ஆகியப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்குத் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும், அவர் ஏதேனும் ஒரு இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளில் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு 19,500 முதல் 62,000 வரை சம்பளம் ஆகும். மற்ற இதரப் பணிகளுக்கு 18,500 முதல் 58,600 ரூபாய் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உதவி அர்ச்சகர் (கீழ்சாந்தி போந்தி) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும், ஆகமப்பள்ளி மற்றும் வேதப் பாடசாலையில் இது தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இவர்களுக்கான சம்பளம் 15,900 முதல் 50,400 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலை விபூதிபோத்தி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவர்களுக்கான சம்பளம் 15,900 முதல் 50,400 ரூபாய் வரை ஆகும்.

மேற்கண்ட இப்பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். மேலும், நீதிமன்றத்தால் தண்டணை பெற்றவர்கள், பெற்ற கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப் பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டணை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவத்தை, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை இம்மாதம் 27ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்- 62016, தூத்துக்குடி மாவட்டம்.

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்று அலுவர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com