வருமான வரித்துறையில்  வேலை வாய்ப்பு 2023!

வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு 2023!

வருமான வரித் துறை வேலை வாய்ப்பு 2023-24. 72 வருமான வரி ஆய்வாளர்( income tax inspector), பல்பணி ஊழியர்கள்(multitasking staff ) மற்றும் வரி உதவியாளர்(tax assistant ) பதவிகளுக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள் , கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

வேலை இடம்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு.

காலியிடங்களின் எண்ணிக்கை: 72.

காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

1. வருமான வரி ஆய்வாளர்( income tax inspector) - 28

2. வரி உதவியாளர்(multitasking staff ) - 28

3. பல்பணி ஊழியர்கள்(tax assistant ) - 16.

சம்பளம்/ஊதியம் மற்றும் தர ஊதியம் :

வருமான வரி ஆய்வாளர் பணிக்கு( income tax inspector) ரூ.4,600 தர ஊதியத்துடன் ரூ.9,300 - 34,800 ஆகவும், வரி உதவியாளர் (multitasking staff ) மற்றும் பல்பணி பணியாளர் (tax assistant ) பதவிக்கு ரூ.5,200 - 20,200 ஆகவும், மாத ஊதியம் ரூ.1,800/ 2,400 தர ஊதியமாகவும் வழங்கப்படும்.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

1.வருமான வரி ஆய்வாளர் ( income tax inspector) / வரி உதவியாளர் (Tax Assistant ) - ஏதாவதொரு துறையில் பட்டதாரி பட்டம் இருக்க வேண்டும்.

2. பல்பணி ஊழியர்கள் (tax assistant) - 10வது தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்.

அகில இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பால் நடத்தப்படும் பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுகளில் மாநில பள்ளிகள் அணி / பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் ஏதேனும் ஒரு விளையாட்டு/பல்கலைக்கழகம் ஏதேனும் ஒரு தேசிய அல்லது சர்வதேசப் போட்டியில் ஒரு மாநிலம் அல்லது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தகுதியுள்ள விளையாட்டு வீரராக இருக்க வேண்டும். (அல்லது) தேசிய உடல் திறன் இயக்கத்தின் கீழ் உடல் திறனில் தேசிய விருதுகள் பெற்ற விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: வேட்பாளர் பட்டியலின் (shortlist) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார், அடிப்படை(ground) / திறன் தேர்வு (proficiency test ) மற்றும் தனிப்பட்ட நேர்காணல் (personal interview). இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தயாராக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது: கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.

official website : https://tnincometax.gov.in/sportsquota/application2022.php

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 06-02-2023

பணி அனுபவம்: இந்தப் பதவிக்கு மேலும் பணி அனுபவம் தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: எந்தப் பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. உயர் பதவிக்கு விண்ணப்பிக்கும் வருமான வரித் துறையின் வழக்கமான ஊழியர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com