இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் Assistant Administrative Officer பதவிக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. எல்ஐசி ஏஏஓ வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள் , கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

வேலை இடம்: விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலை மற்றும் தேர்வு இடத்தை தேர்வு செய்யலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 300.

காலியிடங்களின் பெயர்: உதவி நிர்வாக அலுவலர் Assistant Administrative Officer (Generalist) - 300.

சம்பளம்: ரூ.92,870

வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

உதவி நிர்வாக அலுவலர் Assistant Administrative Officer (Generalist) - ஏதாவதொரு துறையில் பட்டதாரி பட்டம் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

1. முதற்கட்டத் தேர்வு( preliminary exam)

2.முதன்மைத் தேர்வு(mains exam)

3.தனிப்பட்ட நேர்காணல் (personal interview) ஆகியவை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தயாராக இருக்க வேண்டும்.

பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை:

1.வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

2.முதற்கட்டத் தேர்வு ( preliminary exam) கணினி அடிப்படையிலான தேர்வு பின்வரும் பாடங்களைக் கொண்டிருக்கும்.

  • Reasoning Ability (35 Questions, 35 Marks)

  • Quantitative Aptitude (35 Questions, 35 Marks)

  • English Language (30 Questions, 30 Marks).

3.கணினி அடிப்படையிலான அப்ஜெக்டிவ் வகை தேர்வுக்கான (computer-based objective type exam) மொத்த கேள்விகள் 100 ஆகவும் அதன் மொத்த மதிப்பெண்கள் 100 ஆகவும் இருக்கும்.

4.தேர்வின் கால அளவு: 60 நிமிடங்கள் இருக்கும்.

5.ஒரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் negative mark இருக்கும்.

6.எழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும்.

எப்படி விண்ணப்பிப்பது: கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.

official website : https://ibpsonline.ibps.in/licaaojan23/

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31-01-2023

பணி அனுபவம்: இந்தப் பதவிக்கு மேலும் பணி அனுபவம் தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்: ரூ.700.

எஸ்சி/எஸ்டி/பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.85.

உயர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இந்திய கடலோர காவல்படையின் ஊழியர்களுக்கு வழக்கமான ஊழியர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பதாரர்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com