சென்னை பல்கலைக்கழகத்தின் எம்பிஏ  தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு! - எங்கே பார்க்கலாம்?

சென்னை பல்கலைக்கழகத்தின் எம்பிஏ தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு! - எங்கே பார்க்கலாம்?

சென்னை பல்கலைக்கழகத்தில் நேரடி கல்வி கற்க முடியாத மாணவர்கள் தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்புகளை பயில்கின்றனர். தற்போது தமிழகத்தில் தொலைதூர கல்வியில் பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏதேனும் ஒரு வேலைக்கு போய்க்கொண்டே பட்டப்படிப்புகளை படிக்கின்றனர்.

கடந்த 2021 -2022 கல்வியாண்டின் எம்பிஏ படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு நடத்தப்படத்து. இந்த தேர்வின் முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியாகும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள:

www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் செல்லவும். அதன் முகப்பு பக்கத்தில் ரிசல்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அடுத்ததாக வரும் பக்கத்தில் உங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு Summit கொடுக்கவும்

உங்களது தேர்வு முடிவுகள் திரையில் வரும் . அதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com