ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023!

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023!

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023-24 Medical Consultant பதவிக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. பணியிடம் சம்பள விவரங்கள், விண்ணப்பக் கட்டணம், கல்வித் தகுதிகள், பணி அனுபவம், தேர்வு முறை ஆகியவை இதோ.

ரிசர்வ் வங்கியின் பிரதான இடத்தில் அமைந்துள்ள மருந்தகத்திற்கான நிலையான மணிநேர ஊதியத்துடன், ஒப்பந்த அடிப்படையில் வங்கியின் மருத்துவ ஆலோசகர் பதவியை நிரப்ப, பட்டியல் பழங்குடி (எஸ்டி) பிரிவைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக வளாகம், (இணைப்பு கட்டிடம்) இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்டேஷன் சாலை, பன்பஜார், குவஹாத்தி, அசாம் - 781001 மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி காலனி, ஜி.எஸ். சாலை, கிறிஸ்டியன் பஸ்தி, சென்ட்ரல் மால் எதிரில், குவஹாத்தி - 781005. இலிருந்து விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குநர், மனிதவள மேலாண்மைத் துறை (ஆட்சேர்ப்புப் பிரிவு), ஸ்டேஷன் ரோடு, பன்பஜார், குவஹாத்தி - 781001 என்ற முகவரிக்கு பிப்ரவரி 13, 2023 அன்று மாலை 05:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிடம்: Medical Consultant

சம்பளம் மாதம்:

ஒப்பந்தத்தின் முழு காலத்திற்கும் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹1000/

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதிகள்: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம், அலோபதி மருத்துவ முறையில் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் மருத்துவம் பயிற்சி செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒப்பந்த காலம் (Contract peroid): 3 வருடம்

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, குறைந்தபட்ச தகுதித் தரநிலைகள் போன்றவற்றை உயர்த்துவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் வங்கியின் முடிவே இறுதியானது. நேர்காணலுக்கு அழைக்கப்படாத விண்ணப்பதாரர்களுடன் வங்கி எந்த கடிதப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளாது.

For more Details : https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4232

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13/02/2023

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com