5 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை...

5 இடங்களில்  அமலாக்கத்துறை திடீர் சோதனை...
Published on

சென்னையில் ஹவாலா  பணப்பரிமாற்றம் தொடர்பாக வேப்பேரி, எழும்பூர், என்.எஸ்.சி.போஸ் சாலை, விருகம்பாக்கம், ராயபுரம், உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது..

ஹவாலா பணப்பரிமாற்றம்:

தீவிரவாத இயக்கங்களுக்கு, சட்டவிரோதமாக ஹவாலா முறையில் நிதி திரட்டி, தடை செய்யப்பட்ட அமைப்புகள் நிதி வழங்கி வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா அமைப்புடன் தொடர்­புள்ள நிறு­வ­னங்­க­ளை மையப்படுத்தி அம­லாக்­கத்­துறை சோதனை மேற்­கொண்­டது.

அப்போது பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளுக்கு உத­வும் வகை­யில் அந்­நி­று­வ­னங்­கள் சுமார் 120 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி, அதை வங்­கி­களில் செலுத்தி இருப்­பது தெரியவந்­ததாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த தொகை உள்­நாட்­டி­லும், வளை­குடா நாடு­க­ளி­லும் திரட்­டப்­பட்­டு 'ஹவாலா' முறை­யில் பணப்­ப­ரி­மாற்­றம் நிகழ்ந்­துள்­ள­து என்பதையும் அம­லாக்­கத்­துறை தெரிவித்திருந்தது.

ஹவாலா முறை என்பது ஒரு நாட்டில் யாருக்கு போய் பணம் சேர வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட நாட்டின் கரண்சியாக வழங்கப்படும். அதாவது பணப் பரிவர்த்தனை தரகர்கள் மூலமாக பெருமளவு பணத்தை பரிமாற்றம் செய்யும் முறையாகும். இந்த முறையால், பெருமளவு வரி கட்டுவது குறைக்கப்படும் என்பதால் தீவிரவாதிகள் உள்பட பெருமளவில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி வருகின்றனர்.

சோதனை:

இதையடுத்து ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக தொடர்ந்து அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த சோதனையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 குறிப்பாக விருகம்பாக்கம் ஷேக் அப்துல்லா நகரில் உள்ள ஷஃபியுல்லா மற்றும் நியமதுல்லா என்பவர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதலே சோதனை நடைபெற்று வரும் நிலையில், மேலும் 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சோதனைக்குப் பின்பே முழு விபரங்களும் வெளியிடப்படும் என அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com