அமலாக்க இயக்குநரகம், பிபிசி இந்தியாவுக்கு எதிராக 'அந்நியச் செலாவணி மீறல்' வழக்குப் பதிவு செய்தது!

அமலாக்க இயக்குநரகம், பிபிசி இந்தியாவுக்கு எதிராக 'அந்நியச் செலாவணி மீறல்' வழக்குப் பதிவு செய்தது!

அமலாக்க இயக்குனரகம் (ED) பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின்(BBC) இந்தியக் கிளையின் மீது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (Foreign Exchange Management Act- (FEMA)) கீழ் அந்நியச் செலாவணி மீறல் குற்ற வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது, இதுவரை, பிபிசி இந்தியாவின் இயக்குனர் ஒருவர் உட்பட ஆறு ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FEMA இன் விதிகளின் கீழ் ஆவணங்கள் மற்றும் சில நிறுவன நிர்வாகிகளின் அறிக்கைகளை பதிவு செய்ய ED அழைப்பு விடுத்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணையானது, அந்நிறுவனம் செய்ததாகக் கூறப்படும் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) விதிமீறல்களை முக்கியமாகப் பார்க்கிறது. இன்று, அவர்கள் சில ஆவணங்களுடன் பிபிசியின் மற்றொரு பணியாளரை அழைத்துள்ளனர்,மேலும் விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்று ஒரு அதிகாரி கூறினார்.

இந்த விசாரணையானது அந்நிறுவனத்தின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) மீறல்கள் குறித்து முக்கியமாக பார்க்கிறது. பிப்ரவரியில் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலக வளாகத்தை வருமான வரித்துறை ஆய்வு செய்ததன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

I-T துறையின் நிர்வாக அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), பல்வேறு பிபிசி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் காட்டப்படும் வருமானம் மற்றும் லாபமானது இந்தியாவில் அவற்றின் செயல்பாடுகளின் அளவுடன் "இணக்கமாக இல்லை அதாவது பொருத்தமாக இல்லை" என்றும் வரி செலுத்தப்படவில்லை என்றும் கூறியது.

I-T சட்டத்தின் பிரிவு 133A இன் கீழ் நடத்தப்படும் ஒரு கணக்கெடுப்பு, பொதுவாக ஒரு தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையின் முன்னோடியாகும், மேலும் இது வணிக வளாகத்தில் மட்டுமே நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com