ஜூலை 2ம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்- அமைச்சர் பொன்முடி!

ஜூலை 2ம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்- அமைச்சர் பொன்முடி!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 2ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி பேசியதாவது,“தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. பொறியியல் படிப்பில் விருப்பமுள்ள மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 17ம் தேதி நிலவரப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பத்தை பதிவுச்செய்துள்ளனர். அவர்களில் 90,471 மாணவர்கள் பதிவுச் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். அவர்களில் 50,686 மாணவர்களின் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜுன் 4ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 2ம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 2ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாகவே கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்க உள்ளதால், ஜூலை 7ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.

பாலிடெக்னிக் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை கட்டணம் குறைக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டுவந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவர்களின் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் சேர்க்கை கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 விதம் ஒவ்வொரு ஆண்டிற்கும் இனி வசூலிக்கப்படும். மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் (மே 19) நிறைவடைகிறது என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மாணவர்களின் நலன்கருதி மேலும் 3 நாட்கள் காலஅவகாசம் நீட்டிக்கப்படுகிறது.இதனால், வரும் 22ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்றார்.

Minister Ponmudi, TN Engineering Counseling, TN Arts and Science College, TN Polytechnic College, Students, TN Education,

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com