குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம்?

குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம்?
Published on

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது. ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் கூடிய விரைவில் பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலினும், விளையாட்டு மற்றும் இளைஞர்நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உறுதி அளித்திருந்தனர். அதன் படி இந்த திட்டம் வரும் பட்ஜெட்டில் வழங்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 முதல் வழங்கப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கியுள்ள நிலையில் நிதி நிலையால் இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் காலம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த திட்டம் வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் இருந்து குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை நிதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்தப் பணி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

பி.எச்.எச். என்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) ரூ.1,000 கிடைக்கும்.

அதே நேரத்தில் இந்த திட்டத்தை பெறுவதில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானம் ஆகியவையும் கணக்கிடப்படும் என்று கூறப்படுகிறது.

அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்காது.

புதுமைப்பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளின் தாயார் இந்த திட்டத்தில் பயன்பெற தடை எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com