ஈரோடு இடைத்தேர்தல் திமுக பணப்பட்டுவாடா: அண்ணாமலை வீடியோ வெளியீடு!

ஈரோடு இடைத்தேர்தல்
திமுக பணப்பட்டுவாடா: அண்ணாமலை வீடியோ வெளியீடு!

ரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இக்கூட்டணிக்கான தேர்தல் அலுவலகம் பெருந்துறை சாலையில் உள்ளது. அங்கு நேற்று தி.மு.க. அமைச்சர்கள் நேரு, வேலு, முத்துசாமி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் இளங்கோவனும், அமைச்சர் நேருவும் பேசியதாக வீடியோ பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் பதிவான பேச்சில் சில வார்த்தைகள் பதிவாகாமலும், சில வார்த்தைகள் கோர்வை இன்றியும் காணப்படுகின்றன. இந்த வீடியோ குறித்து அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என நம்பும் கட்சி. இதில் சந்தேகம் இருந்தால் இந்த வீடியோவை பார்க்கவும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் இந்த வீடியோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், ‘பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை. இந்த வீடியோ பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கூட்டணி கட்சியினருடன் பேசும்போது பல்வேறு கருத்துக்களை நான் கூறியுள்ளேன். அதை வெட்டியும் ஒட்டியும் இந்த வீடியோ பதிவை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதை நான் பொருட்படுத்தவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோல், இந்த வீடியோ பதிவு குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியபோது, ‘அமைச்சர் நேருவும், வேட்பாளர் இளங்கோவனும் பேசுவது போல் சமீபத்தில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அதில் நாளை மறுதினம் செயல் வீரர்கள் கூட்டம் வைத்துள்ளோம். அதற்கு தலைவர்கள் வருவதால் முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதை சில விஷமிகள் ஒட்டி, வெட்டி, பணப் பட்டுவாடா குறித்துப் பேசியதாகப் பரப்புகின்றனர். இது திட்டமிட்ட மார்பிங். இது எந்த விதத்திலும் திமுகவின் வெற்றியை பாதிக்காது’ என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com