தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக திடீரென அதிகமான கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 7 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது.
தமிழ்நட்டில் ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இதனிடையே வைரஸ் பாதிப்பு மீண்டும் சில வாரங்களாக அதிகரித்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று மாநிலத்தில் 16,153ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 15,843ஆக குறைந்து உள்ளது. அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 5213 பேரும் செங்கல்பட்டில் 1948 பேரும் கோவையில் 1220 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மூன்று மாவட்டங்களைத் தவிர வேறு எங்கும் ஆக்டிவ் கேஸ்கள் ஆயிரத்தைத் தாண்டவில்லை.
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், ஒப்பிட்டளவில் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. தலைகர் சென்னையில் இன்று 431 பேருக்கு கொரோனா பதிவாகி உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 212 பேருக்கும் கோவையில் 178 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. அதேபோல விருதுநகரில் 118 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதம் 5.7%ஆக உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் பாசிட்டிவ் விகிதம் 12.3%ஆக உள்ளது.
சமீபகாலமாக அதிகரித்து வந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 69 நாட்களுக்கு பிறகு குறைந்தது. 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 123 குறைந்தது. ஆனால் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.